ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை அனைவரும் அறிவோம்.
ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என் டி ஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் ராம் சரணின் பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா
தமிழில் ஜான்வி கபூர்
ஆனால், இதுவரை தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், விரைவில் தமிழில் காலடி எடுத்து வைக்கப்போகிறார் ஜான்வி கபூர். ஆம், அவரை தமிழுக்கு கொண்டுவரப்போகிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.
அட்டகத்தி தினேஷை ஹீரோவாக வைத்து பா. ரஞ்சித் இயக்கிவரும் படத்தில் ஜான்வி கபூரை நடிக்கவைக்க போகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதனால் விரைவில் தமிழில் ஜான்வி கபூரை பார்க்கலாம் என கூறப்படுகிறது.