விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர், தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இப்படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
மலையாள சென்சேஷன் நடிகை Anju Kurian.. சுல்தானே பாடலுக்கு ட்ரெண்டிங் ரீல்ஸ் வீடியோ
இதில் சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவக்குமார் பேசிய சில விஷயம் சர்ச்சையானது. அதில், “என் மகன் சூர்யாவுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா?” எனப் பெருமையாகப் பேசினார்.
பதிலடி
இந்நிலையில், இந்த விஷயம் குறித்து நடிகர் விஷாலிடம் கேள்வி எழுந்தது. அதற்கு, “முதல்முறையாக தனுஷ் தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார். பின் நான் சத்யம், மதகஜராஜா படங்களுக்காக சிக்ஸ் பேக் வைத்தேன். ஆனால் அதை மக்கள் மறந்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.