காஷ்மீரின் பஹல்காம் என்னும் இடத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். ஹிந்து ஆண்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பற்றி அனைவரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினி ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் காஷ்மீர் தாக்குதல் பற்றி கேட்டபோது அவர் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
இனி கனவிலும் நினைக்க கூடாது..
தீவிரவாத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி திரும்பி இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என இப்படி எல்லாம் செய்றாங்க.
கண்டிப்பாக அதை செய்தவர்களுக்கும், அதன் பின்னால் இருப்பவர்களுக்கும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், கண்டுபிடித்து கடுமையான ஒரு தண்டனை கொடுக்க வேண்டும்.
“மறுபடியும் அப்படி செய்ய வேண்டும் என அவர்கள் கனவிலும் எதிர்பார்க்க கூடாது. அப்படி செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது” என ரஜினி கூறி இருக்கிறார்.