குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தயாரான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மாஸான கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு தயாரான இப்படம் ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பு பெற்று வந்தது.
அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம்.. ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
தமிழகத்தில் மட்டுமே ரூ. 173 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் உலகம் முழுவதுமே நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
பாக்ஸ் ஆபிஸ்
படம் ஒருபக்கம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அஜித் கார் ரேஸில் செம பிஸியாக இருந்தார். நேற்று நடந்த சிஎஸ்கே போட்டியை அஜித் தனது குடும்பத்துடன் வந்து பார்த்த புகைப்படம் எல்லாம் வைரலாகி இருந்தது.
தற்போது இப்படம் 16 நாள் முடிவில் சென்னையில் ரூ. 13 கோடி படம் வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.