முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் : அநுர அதிரடி அறிவிப்பு

நாட்டில் சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மாத்தறை (Matara) வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டத்தை வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

2026 வரவு செலவுத் திட்டம்

எங்கள் தாய்நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் இறையாண்மையையும் மீண்டும் நிலைநாட்டுவதே எங்கள் எதிர்பார்ப்பு. அதேநேரம் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைப் பெறுவது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும்.

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் : அநுர அதிரடி அறிவிப்பு | Bill To Make Illegal Assets State Property Anura

இதற்கிடையில், பொருளாதார நெருக்கடி காரணமாக கைவிடப்பட்டிருந்த வெளிநாட்டு உதவிகளின் கீழ் செயற்படுத்தப்பட்ட பல திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும்.

ஜப்பானிய அரசாங்கம் 11 திட்டங்களை கைவிட்டது. JICA வங்கியால் கடன் வழங்கப்பட்ட 11 திட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஜப்பானிய அரசாங்கம் மீண்டும் 11 திட்டங்களையும் தொடங்க ஒப்புக்கொண்டது.

5,600 மில்லியன் ரூபா இழப்பு

அதாவது பொருளாதாரம் நிலையாக உள்ளது. கடவத்தை-மீரிகம நெடுஞ்சாலைப் பகுதி சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து கடனைப் பெற்று கட்டப்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் : அநுர அதிரடி அறிவிப்பு | Bill To Make Illegal Assets State Property Anura

நாடு வங்குரோத்தானது.

கடன் வழங்குவது நிறுத்தப்பட்டது. அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. 5,600 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்.

சீன நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 21 மில்லியன் வட்டி செலுத்த வேண்டும்.

சீன அரசாங்கத்துடன் மீண்டும் பேசிய பிறகு, எங்கள் பயணத்தின் போது, ​​தடைப்பட்ட நெடுஞ்சாலை உட்பட, தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கவும், 76 புதிய திட்டங்களைத் தொடங்கவும் இணக்கம் ஏற்பட்டது ” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.