கிண்ணியா(Kinniya) பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை,
கோழிமுட்டைகரச்சை பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து, ஒரு வயது
நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த துயர சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் பெய்த மழை
ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய, குடும்பத்தின் ஒரே ஒரு மகனான முகமது
சையான் மிசாரி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வீட்டு முற்றத்தில், தனது
தொட்டிலுக்கு அருகில், விளையாடிக் கொண்டிருந்த இந்த குழந்தை, வீட்டுக்கு
முன்னால் மழைநீர் தேங்கி நிற்கின்ற குழிக்குள், சென்று விளையாட முற்பட்டபோதே
இந்த அனர்த்தம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக, தற்போது இந்தப்
பகுதியில் நீர் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.




