முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

13வது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேசத் தேவையில்லை : மகிந்த தரப்பு வலியுறுத்தல்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SlPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) விஜயம் குறித்து அவரிடம் வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசமுறை விஜயம் நாட்டுக்கு சிறந்தது. மக்கள் விடுதலை முன்னணியை போன்று எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு எந்தவொரு எதிர்க்கட்சியும் வீதியில் பதாதைகளுடன் போராட போவதில்லை.

அநுரவின் இந்திய விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அண்மையில் இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஓரிரு பொதுவான விடயங்கள் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டன.

13வது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேசத் தேவையில்லை : மகிந்த தரப்பு வலியுறுத்தல் | No Need To Talk To India About The 13Th Amendment

நெருக்கடியான நிலையில் இந்தியா இலங்கைக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்பதை ஒருபோதும் மறக்க முடியாது.

இரு நாடுகளுக்கும் இடையில் கைத்தாச்சிடப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் இணக்கப்பாடுகள் இலங்கையின் இறையாண்மையை முன்னிலைப்படுத்தியதாக அமைய வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல்

இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். நாட்டுக்கு சாதகமாக அமையும் ஒப்பந்தங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

13வது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேசத் தேவையில்லை : மகிந்த தரப்பு வலியுறுத்தல் | No Need To Talk To India About The 13Th Amendment

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரந்தளித்தால் தேவையில்லாத முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.