அமெரிக்காவை அவமானப்படுத்தி ஈரானை விட்டு விரட்டியடித்த ஈரானின் இஸ்லாமிய ஆட்சியை கருவறுக்க 45 வருடங்களாகத் துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கின்ற ஒரு நாடுதான் அமெரிக்கா.
ஈரான் மீது ஒரு தாக்குதல் நடாத்துவதற்கு இதனைவிடச் சிறந்த ஒரு சந்தர்ப்பம் இனி ஒருபோதும் அமெரிக்காவுக்குக் கிடைக்காது.
ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள், ஹெளதிக்கள் என்று ஈரானின் கரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ள காலகட்டம் இது.
சிரியா என்கின்ற கவசத்தை இழந்து ஈரான் தவித்துக்கொண்டிருக்கின்ற நேரம்.
ஈரானின் உதவிக்கரம் என்று ஈரான் நம்பியிருந்த ரஷ்யா, உக்ரேன் யுத்தத்திற்குள் முழுவதுமாக முடக்கிக்கிடக்கின்ற தருணம் இது.
ஈரான் கிட்டத்தட்ட நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கின்ற காலகட்டம் என்றுதான் ஈரானின் இன்றைய நிலையை வர்ணிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
ஈரானுடன் சண்டைசெய்து ஈரானை அழிப்பதற்கான ஒரு அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை என்று எதற்காக அமெரிக்கா வேறு திசைக்குச் செல்லமுற்படுகின்றது?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/E9f0YZUXOHI