முன்னாள் போராளியான கருணா மற்றும் நாட்டின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்கு தடை விதிப்பதாக பிரித்தானியா அறிவித்தது.
இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரல் சவேந்திர டி சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே பிரித்தானியா இந்த தடையை விதித்தது.
இதன்போது, குறித்த இலங்கையர்களுக்கு பயணத்தடை மற்றும் சொத்துத் தடையை விதித்து பிரித்தானியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இலங்கையில், இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குறித்த நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டே இந்த தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தடைக்கு பின்னணியின் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்த தடைக்கு பின்னர், பிரித்தானியாவில் இடம்பெற உள்ள மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்கின்றது, பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் உடனான ஊடறுப்பின் நேரலை நிகழ்ச்சி,

