முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடம் அநுர விடுத்துள்ள கோரிக்கை

சந்தையில் நெல் மற்றும் அரிசி விற்பனையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணா தனக்கு காலவகாசம் வழங்குமாறு விவசாயிகளிடமும், நுகர்வோரிடமும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கோரிக்கை விடுத்துள்ளார்.

அநுராதபுரம் சிறி மகா விகாரையில் இன்று (04 .04.2025) நடைபெற்ற வருடாந்த புத்தரிசி மங்கள நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “விவசாயத்தை முன்னிலைப்படுத்தியதாகவே இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டது. 

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

இலங்கையின் பாரம்பரியத்துடன் விவசாயம் தொடர்புப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் அபிவிருத்திகளுக்கு விசேட திட்டங்களை நாங்கள் செயற்படுத்துவோம். 

விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடம் அநுர விடுத்துள்ள கோரிக்கை | Anura Request Regarding Crisis In Paddy Rice Sales

விவசாயத்துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்போம். நீர்பாசனத்துறை அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாய பயிர்ச்செய்கையில் விதை குறித்து பிரச்சினைகள் காணப்படுகிறது. விதைகளின் பல்லினத்தன்மை இன்று வரையறுக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கே உரித்தான விவசாய விதை உற்பத்தி அபிவிருத்திகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தலையீடு 

விவசாயிகள் தமது விளைச்சலை விற்பனை செய்துக் கொள்ளும் போது பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடம் அநுர விடுத்துள்ள கோரிக்கை | Anura Request Regarding Crisis In Paddy Rice Sales

அதேபோல் நுகர்வோர் நியாயமான விலைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தலையீடு செய்துள்ளது.

விவசாய விற்பனைத் துறையில் தனி ஏகாதிபத்தியம் தோற்றம் பெற்றுள்ளது. ஒரு குறுகிய தரப்பினர் நெல் மற்றும் அரிசி ஆகியவற்றில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதியின் கோரிக்கை

நெல் களஞ்சியசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. சிறந்த களஞ்சிய கட்டமைப்பின் ஊடாக நெல் பராமரிக்கப்படும். நெல் கொள்வனவுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் 5 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடம் அநுர விடுத்துள்ள கோரிக்கை | Anura Request Regarding Crisis In Paddy Rice Sales

சந்தையில் நெல் மற்றும் அரிசி விற்பனையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓரிரு போகங்கள் செல்லும்.இதற்கு எனக்கு காலவகாசம் வழங்குமாறு விவசாயிகளிடமும்,நுகர்வோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். 

நுகர்வோரையும், விவசாயிகளையும் ஒரு குறுகிய தரப்பினர் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கவதற்கு இடமளிக்க முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.