முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட தங்கம்

தங்கத்திற்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்பட்டதால் அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு தங்கம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தங்கத்தின் மீது வரிவிதிப்புகளை விதிக்காமல் விலக்கு அளித்ததையடுத்து, கடந்த சில மாதங்களில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தங்கம் மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு திரும்பத் தொடங்கியுள்ளது.

மார்ச் மாதத்தில், சுவிட்சர்லாந்து 25.5 மெட்ரிக் டன் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

தங்க ஏற்றுமதி

இது கடந்த 13 மாதங்களில் அதிகமான அளவாகும், அதே நேரத்தில், அமெரிக்காவுக்கு செல்வதற்கான தங்க ஏற்றுமதி 32 சதவீதம் (103.2 மெட்ரிக் டன்) குறைந்தது.

அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட தங்கம் | Us To Swiss Gold Trade

COMEX களஞ்சியங்களில் தங்கப் பங்கு குறைந்து வருவதும் இதனுடன் தொடர்புடையது.

இந்தநிலையில், ஏப்ரல் நான்காம் திகதி வரை 45.1 மில்லியன் அவுன்ஸ் இருந்த தங்கம் தற்போது 43.6 மில்லியன் அவுன்ஸாக குறைந்துள்ளது.

சர்வதேச கையிருப்பு

அதாவது 1.5 மில்லியன் அவுன்ஸ் குறைந்துள்ளது, இதன் மதிப்பு 4.8 பில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட தங்கம் | Us To Swiss Gold Trade

சுவிட்சர்லாந்து தங்கம் சுத்திகரிப்பு மற்றும் சர்வதேச கையிருப்புத் தங்க நகர்வுகளுக்கான முக்கிய மையமாக இருந்ததால், தற்போதைய மாற்றம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதை குறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவ்வாறு சர்வதேச வர்த்தகச் சூழ்நிலையின் மாறுதலால் தங்கத்தின் நகர்வும் மாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்