குக் வித் கோமாளி 6
சிரிப்பு மக்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.
ஆனால் இப்போது உள்ள வாழ்க்கை முறையில் மக்கள் பரபரப்பாக ஓடுவதால் சிரிப்பு என்பதை மறந்துபோய் தான் உள்ளனர்.
அப்படி டென்ஷனாகவே வேலை செய்யும் மக்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்பானது தான் விஜய் டிவியின் குக் வித் கோமாளி.
ஒவ்வொரு சீசனிற்கும் மக்கள் பேராதரவு கொடுக்க விரைவில் குக் வித் கோமாளியின் 6வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

ஆரம்பம்
முக்கிய கோமாளிகளாக புகழ், சரத், ஜெயசந்திரன், சுனிதா, ராமர் ஆகியோர் முக்கிய கோமாளிகளாக களமிறங்க பிக்பாஸ் 8 புகழ் சௌந்தர்யா இவர்கள் லிஸ்டில் புதியதாக இணைந்துள்ளார்.

அதேபோல் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடுவர்களாக இருக்க இவர்களுடன் புதியதாக கௌஷிக் ஷங்கர் களமிறங்க உள்ளார்.
தற்போது குக் வித் கோமாளி 6வது சீசன் மே 4ம், ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்குகிறதாம்.
View this post on Instagram

