நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர் நாளை (07) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பில் (Colombo) நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
கொழும்பில் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க (Chandrika Kumaratunga), மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆகியோரே நாளைய தினம் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர் என்று தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள 44 சதவீத வரி குறித்தும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துமே இதன்போது விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
https://www.youtube.com/embed/IccgS5MFbR4

