முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாற்றுத் திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம் : ஏறாவூரில் ஆரம்பமான வேலைத்திட்டம்!

மட்டக்களப்பில் (Batticaloa) மாற்றுத் திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம் என்ற அடிப்படையில் அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவும் நோக்கில் குறித்த திட்டம் நேற்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏர்முனை மாற்று திறனாளிகள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி சந்திப்பின் பிரதம அதிதிகளாக ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஆறாம் வட்டார தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளருமான செ.நிலாந்தன் மற்றும் சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் ஆகியோர் கலந்து கொண்டு உதவி திட்டங்களை வழங்கி வைத்தனர்.

850 மாற்றுத் திறனாளிகள்

ஏறாவூர் பற்று பிரதேசத்தில் யுத்தத்தினால் அவயங்களை இழந்த போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள் உட்பட இயற்கையாக மாற்றுத் திறனாளிகளாக பிறந்தவர்கள் உள்ளடங்கலாக சுமார் 850 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம் : ஏறாவூரில் ஆரம்பமான வேலைத்திட்டம்! | Hand To The Differently Abled Program

இவர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டங்களை ஏர் முனை மாற்றுத் திறனாளிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் ஏறாவூர் பற்று மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடாத்துவதற்கான ஆரம்பகட்ட நிதியுதவியை வழங்குவதற்கு சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் முன்வந்ததோடு அதனை ஆரம்பிக்கும் முகமாக முதல் மாதத்திற்கான காசோலையை சங்க நிர்வாகத்தினரிடம் வழங்கி வைத்ததுடன் ஒரு வருடத்திற்கான நிதியுதவியையும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உதவிகளைப் பெற்றுக்கொடுக்க தயார்

இங்கு கருத்து தெரிவித்த  ஊடகவியலாளர் நிலாந்தன், “ஏறாவூர் பற்றில் உள்ள மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடாத்துவதற்கான நிரந்தர பந்தல், கதிரைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி தருவதற்கான உதவிகளை புலம்பெயர் சமூகம் ஊடாக பெற்றுத் தருவேன்.

மாற்றுத் திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம் : ஏறாவூரில் ஆரம்பமான வேலைத்திட்டம்! | Hand To The Differently Abled Program

மாற்று திறனாளிகள் குடும்பத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தேவைப்படும் உதவிகளை பெற்று தருவதற்கும், விசேட தேவையுடைய குடும்பங்களின் சில சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும், திடீர் அனர்த்தங்கள் மற்றும் மரணங்கள் ஏற்படும் போது மாற்று திறனாளிகள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதற்கான ஒரு தொகை நிதியை திரட்டுவதற்கான உதவிகளை பிரதேச வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.

இதேவேளை அடுத்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து மாற்றுத் திறனாளிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.