விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா ரோலில் நடித்து புகழ் பெற்றவர் வெங்கட் ரங்கநாதன். அவர் அதன் பிறகு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசனில் செந்தில் என்ற ரோலில் நடித்து வருகிறார்.
முதல் சீசனில் அவர் ஜோடியாக நடித்த ஹேமா ராஜ்குமார் தான் தற்போது ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2லும் அவர் ஜோடியாக நடித்து வருகிறார். அதனால் இந்த ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

குழந்தை
நடிகர் வெங்கட் ரங்கநாதன் மனைவி அஜந்தா கர்ப்பமாக இருந்த நிலையில் இன்று பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.
குழந்தை கையை பிடித்து இருக்கும் போட்டோ உடன் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெங்கட் வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெங்கட் மற்றும் அஜந்தா ஜோடிக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram

