இந்திரஜா
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த பெயர், புகழை பயன்படுத்தி தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
இப்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்தார்.
அதன் பின், தனது முறைமாமனை திருமணம் செய்துகொண்ட இந்திரஜாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்தது.


இளசுகளை கவர்ந்த நடிகை கயாடு லோஹரா இப்படி?.. மயக்கும் லுக்கில் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
மகிழ்ச்சியான விஷயம்
இந்நிலையில், தனது மகன் பிறந்து 100 நாட்கள் கடந்த நிலையில், அதை விழாவாக கொண்டாடி உள்ளனர் இந்திரஜா மற்றும் அவரது குடும்பத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா தளம் மூலம் பகிர்ந்துள்ளார் இந்திரஜா.
தனது அப்பா அம்மா என குடும்பத்துடன் அவர் கொண்டாடிய விழாவின் போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




