தேசிய மக்கள் சக்தியினர் (NPP) ஊழல்வாதிகள்,மோசடி செய்கின்றவர்கள் இல்லையென்றால் நடைபெற்ற மேதினத்திற்கு செலவு செய்த செலவீனங்களை வெளிப்படுத்துங்கள் என
இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சவால்
விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி தொடர்பில் நாட்டு மக்களுக்கு…
மேலும் கருத்து
தெரிவித்த அவர்,
ஊழல் மோசடிகளை ஒழிக்கப்போகின்றோம் என்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கொழும்பில் மேதினத்தினை பிரமாண்டமாக தேசிய மக்கள் சக்தி
ஏற்பாடு செய்திருந்தது.

அனைவருக்கும் சிவப்பு ரீசேட்டுகள் வழங்கி பெருமளவான
பணத்தினையும் செலவளித்திருந்;தனர்.
கொழும்புக்கு 5500 பஸ்களில் மக்களை
கொண்டு வருவதற்கான அனுமதிகளை பொலிஸில் பெற்றிருக்கின்றார்கள்.இவ்வளவு பஸ்களில்
மக்களை கொண்டு வருவதானால் எவ்வளவு நிதி தேவைப்பட்டிருக்கும்.
இதற்கான பணம் அநுரகுமார திசாநாயக்கவின் வீட்டிலிருந்து வந்ததா, அல்லது
பிரதமரின் வீட்டிலிருந்து வந்ததா.எங்கிருந்து இவ்வளவு நிதி வந்தது.
இவர்கள்
ஊழல்வாதிகள் இல்லை, மோசடி செய்யவில்லையென்றால் நான் பகிரங்க சவால்
விடுக்கின்றேன்.
நேற்றைய கூட்டத்தில் இவ்வாறான செலவுகளை
எவ்வாறு செய்கின்றீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். அவர்களினால்
செய்யமுடியாது.அவர்களுக்கு வரும் நிதி தொடர்பில் நாட்டு மக்களுக்கு
தெரியப்படுத்தவேண்டும். தெரியப்படுத்த முடியாவிட்டால் இவர்களும்
ஊழல்வாதிகள்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.




