மக்கள் சந்திப்பொன்றின் போது சனநெரிசலில் சிக்கியிருந்த சிறுமியொருவரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தானாக முன்வந்து மீட்டுள்ளார்.
சம்மாந்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP) பேரணியின் போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏராளமான ஆதரவாளர்கள் ஜனாதிபதி அநுரவிற்கு அருகில் திரண்ட நிலையில், அங்கு பரபரப்பான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயற்பாடு
அதன்போது, கூட்டத்தில் சிறுமி தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்த ஜனாதிபதி, தனிப்பட்ட முறையில் தலையிட்டு அவரை மீட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.
https://www.youtube.com/embed/Hrzo6cr6-j0

