முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல் : 47 பேர் படுகாயம்

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் 47 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12 இடங்களை ட்ரோன்கள் தாக்கியுள்ள நிலையில், தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள், பொதுமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வெடிக்கும் டிரோன்

இரவு முழுவதும் ரஷ்யா 183 வெடிக்கும் டிரோன்களை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

அவற்றில், 77 உக்ரேனிய பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும் மேலும் 73 தொலைந்து போயியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல் : 47 பேர் படுகாயம் | Russia Launches Drone Strikes On Ukraine

இந்தநிலையில், ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது வான் பாதுகாப்புப் படையினர் ஒரே இரவில் 170 உக்ரேனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.

எட்டு க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் மூன்று ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உண்மையான முடிவு

இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், உக்ரைனில் ஒவ்வொரு இரவும் ஒரு கொடுங்கனவாக மாறி, உயிர்களை பலிவாங்குகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல் : 47 பேர் படுகாயம் | Russia Launches Drone Strikes On Ukraine

உக்ரைனுக்கு பலத்த வான் பாதுகாப்பு தேவை, எங்கள் அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளிடமிருந்தும் வலுவான மற்றும் உண்மையான முடிவுகள் தேவை.

கடந்த புதன்கிழமை உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனால் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை அமெரிக்கா மேலும் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதைத்தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதல் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.