தேர்தலின் பின்னர் தழிழரசுக் கட்சியில் நிலவும் சிக்கல்களை இளைய தலைமுறையினரால் முழுமையாக தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை தழிழரசுக் கட்சி (ITAK) சார்பில் திருகோணமலையில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனநாயக ரீதியில் கட்சி செயற்படுவதனால் தங்களது கட்சியில் பிரச்சினைகள் காணப்படுவதாக எதிர் தரப்பினர் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மக்கள் அரசியலின் புதிய தலைமுறை மீது நம்பிக்கை வைக்கும் பட்சத்திலேயே அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலை தொடர்ந்து தமிழரசுக்கட்சி பாரிய மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து அவர் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காண்க…
https://www.youtube.com/embed/LrHBStSRyaQ

