புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக இன்று (08) காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பிலும் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று(07) வத்திக்கானில்(vatican) தொடங்கியது.
வெளியான கரும்புகை
நேற்று மாலை நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்க முடியாததால் கரும்புகை வெளியான நிலையில் மீண்டும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்கெடுப்பைத் தொடர்ந்து வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெசிலிக்காவின் புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இது புதிய பாப்பரசரை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை வெளிக்காட்டவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
🛑 you may like this…!
https://www.youtube.com/embed/Qrbz_zwtfP4

