அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருளின் அளவும் 700 லீட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது.
வாகனம், எரிபொருள் அளவு குறைப்பு
முன்னதாக, ஒரு அமைச்சருக்கு மூன்று வாகனங்கள் மற்றும் மாதத்திற்கு 2,250 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால(ananda wijepala) தெரிவித்தார்.

