சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தியின் கர்ப்பம் பற்றிய பிரச்சனை தான் ஓடிகொண்டிருக்கிறது.
தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என அவர் தேடிக்கொண்டிருக்க, அதற்கான ஆதாரங்களை அழிக்க வில்லி மித்ரா பல வேலைகளை செய்து வருகிறார்.
மகேஷ் லேப்டாப்பில் இருக்கும் வீடியோவில் எதாவது விஷயம் தெரியும் என அதை பார்க்க ஆனந்தி முயற்சி செய்கிறார்.

நாளைய ப்ரோமோ
ஆனால் அந்த வீடியோவை எப்படியவது அழித்துவிட வேண்டும் என மித்ரா மகேஷின் லேப்டாப்பை எடுத்து வீடியோவை தேடுகிறார். ஆனால் அதை கண்டுபிடிக்கும் நேரத்தில் மாட்டிக்கொள்கிறார்.
மறுபுறம் ஆனந்தி அன்புவிடம் இருந்து விலக என்ன செய்யலாம் என தனது தோழிகளிடம் ஐடியா கேட்கிறார்.
நீங்களே பாருங்க.

