முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொலை குற்றங்களை செய்த பிள்ளையான் : சாடும் அநுர தரப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த காலத்திலும், அதன் பின்னரும் பிள்ளையான், பல்வேறு கொலைகள் மற்றும் குற்றங்களை செய்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் (Bandarawela) நேற்று (24.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் எப்போதும் பொய் கூறியதில்லை. எங்களால் முடிந்த விடயங்களை மாத்திரமே நாங்கள் கூறியிருக்கிறோம். நாங்கள் கூறிய விடயங்களை கட்டாயம் நிறைவேற்றியே தீருவோம். 

அரசியல் பழிவாங்கல்

அவற்றை நிறைவேற்ற ஆரம்பித்தும் இருக்கிறோம். எமது அரசியல் வரலாற்றில் பொய்யை மாத்திரம் கூறிய வரலாறும் இருக்கிறது.

கொலை குற்றங்களை செய்த பிள்ளையான் : சாடும் அநுர தரப்பு | Many Crimes Committed By Children Rilwin Silva

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பெரும் குழப்பம் ஏற்படும், அரசியல் பழிவாங்கல் இடம்பெறுமென தேர்தல் காலத்தில் பெரும் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தார்கள். 

ஆனால் இதுவரையில் அப்படியொன்றும் இடம்பெறவில்லை. அவர்களே பொய் கூறியிருக்கிறார்கள். இரு தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளோம்.

பிள்ளையான்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரொருவரை கடத்திச் சென்று காணமலாக்கிய குற்றச்சாட்டிலேயே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதற்கான சாட்சிகள் இருக்கின்றன. ஆனால் பிள்ளையான் (Pillayan) இந்தக் குற்றத்தை மாத்திரம் செய்யவில்லை.

தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்திருந்த காலத்தில் இடம்பெற்ற அரந்தலாவ பிக்கு கொலை, காவல்துறை அதிகாரி கொலை போன்ற சம்பங்களை கணக்கில் கொள்ளாவிட்டாலும் அதன் பின்னர் பிள்ளையான் பல்வேறு ஒப்பந்தங்களுக்காக கொலைகளை செய்துள்ளார்கள். குற்றங்களையும் செய்துள்ளார்.

கொலை குற்றங்களை செய்த பிள்ளையான் : சாடும் அநுர தரப்பு | Many Crimes Committed By Children Rilwin Silva

எனவே, பிள்ளையான பல்வேறு குற்றச்செயல்களின் முக்கியமானவராவார்.அவரை கைதுசெய்து 90 நாட்களுக்க தடுத்து வைத்துள்ளோம். பிள்ளையானுக்கு கதைப்பதற்கு நிறைய நாட்கள் இருக்கின்றன. பிள்ளையானை விசாரிப்பதற்கு காவல்துறையினருக்கும் அதிக நாட்கள் இருக்கின்றன. 

தற்போது ரணில் விக்கரிமசிங்க, மகிந்த ராஜபக்ச,உதய கம்மன்பில, ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் பயந்து பிள்ளையானை பாதுகாக்க ஒன்று திரண்டுள்ளனர். 

ரணில் தொலைபேசி அழைப்பு

பிள்ளையானை தேசத்தின் வீரராகவும், யுத்த நெருக்கடி காலத்தில் பிள்ளையானே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாகவும் கூறுகிறார்கள். எதற்காக இவ்வாறு குழப்பமடைகிறார்கள்.

கொலை குற்றங்களை செய்த பிள்ளையான் : சாடும் அநுர தரப்பு | Many Crimes Committed By Children Rilwin Silva

பிள்ளையான் வாயை திற்நதால் எவற்றை கூறுவார், இவர்கள் பெற்றுக்கொடுத்த ஒப்பந்தங்கள் வெளிவந்துவிடுமோ என்று பயந்துள்ளார்கள்.

பிள்ளையான் இரகசிய காவல்துறையிடம் என்ன கூறினார் என்பதை அறிந்துகொள்ளவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்காகவே, பிள்ளையானுக்கு ரணில் தொலைபேசி அழைப்பும் விடுத்துள்ளார்கள்.

பிள்ளையானினூடாக அவர்களால் முன்னெடுக்கப்பட்ட குற்றங்களை தொடர்பில் பிள்ளையான் வாய் திறந்தால் ஒவ்வொருவரும் வரிசையாக சிறைக்குச் செல்ல நேரிடும்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.