ரம்பா
அழகிய லைலா, அது இவளது ஸ்டைலா என்ற பாடலை கேட்டாலே ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்ற இந்த பாடலில் ரம்பா ஆடிய நடனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.
90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
ஆனால், திருமணத்திற்கு பின் சமையலறையை எப்படி உருவாக்குவது என்ற படிப்பினை படித்துள்ளார். அதை தொழிலாகவும் செய்து வருகிறார்.


போர் முடிந்துவிடும், தலைவர்கள் கைக்குலுக்குவர் ஆனால்.. நடிகை ஆண்ட்ரியா உருக்கம்
அந்த விஷயம்
தற்போது, ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 – ல் நடுவராக வலம் வருகிறார் ரம்பா. அப்போது அந்த நிகழ்ச்சியில் ரம்பாவை மேடம் எனக் குறிப்பிட்டு நடன இயக்குநர் கலா மாஸ்டர் பேசியுள்ளார்.
அதற்கு ரம்பா சொன்ன விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” எந்த பிசினஸ் வுமனும் தன்னை மேடம் என்று அழைப்பதை விரும்பமாட்டார்கள்.
அவர்கள் தங்களை அவர்களது பெயர் கொண்டு அடையாளப்படுத்த வேண்டும் என்று தான் நினைப்பார்கள். எனவே நீங்கள் என்னை மேடம் என்று அழைக்கத் தேவையில்லை. ரம்பா என்று அழைத்தாலே போதும்” என்று கூறியுள்ளார்.


