சந்தானம்
நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர். மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவர் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் மே 16ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.


23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.. அடேங்கப்பா!
என்ன ஆனது?
இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி ஆர்.கே.எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அதாவது, படத்தின் தலைப்பு, இதற்கு முன்பு ஆர்.கே.எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களின் தொடர்ச்சி. இதற்காக எங்களிடம் அனுமதி பெறாமல் இந்த தலைப்பை பயன்படுத்தியுள்ளனர் என்று கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது. இதனால் படத்தின் ரிலீஸில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

