வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் தோல்வியே காணாத இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை 2 கலவையான விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கும் என கூறப்பட்டுள்ளது.


பெண்கள் தானே, தலையில் எழுதியுள்ளது.. நடிகை மீனா குறித்து ரம்பா எமோஷ்னல்
ஓபன் டாக்
இந்நிலையில், வெற்றிமாறன் அவரது சினிமா பயணம் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” ஒரு படத்தை எடுத்து முடிக்க எவ்வளவு காலமாகும்? என்பதை இயக்குநரை தவிர்த்து வேறு யாரும் தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்கவும் கூடாது.
சமீபத்தில் ஒரு பெண் இயக்குநர் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வந்தார். அவரை பார்க்கும்போது 20 வருடங்களுக்கு முன் என்னை பார்த்தது போன்று இருந்தது.
தற்போது சினிமாவில் பெண்கள் அதிகரிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நான் வன்முறை படங்களை காட்டிலும் காதல் படங்களை தான் அதிகம் தேர்வு செய்வேன்.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக உள்ளது. அதனால் தான் காதல் படங்கள் கைகூடாமல் போய் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.


