முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடா வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற தமிழ் பெண்

கனடாவின் (Canada) புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (Anita Anand) நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன் என பதவிபிரமாணத்தின் பின் அனிதா ஆனந்த் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பான மற்றும் நியாயமான உலகத்தை உருவாக்க பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் உங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்றும் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை

அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுதேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அமைச்சரவையில் மொத்தம் 28 அமைச்சர்கள் 10 மத்திய இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 38 பேர் இடம் பெற்றனர். இதில் 24 பேர் புது முகங்களாகும்.

இந்த அமைச்சரவையில் தமிழக வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் இடம்பெற்றுள்ளார். அவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பகவத்கீதையை வைத்து அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கெண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுபாதுகாப்பு அமைச்சராக ஹரி

இதேவேளை, கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) பதவியேற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வர் ஆவார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, ஹரி ஆனந்தசங்கரி, மக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, அவசர நிலை மேலாண்மை, குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளுக்கு தலைமை தாங்குவார்.  

தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 13, 2025 அன்று அறிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஹரி ஆனந்தசங்கரியின் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஹரி ஆனந்தசங்கரி, கனடாவின் நீதி அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may like this

https://www.youtube.com/embed/SRg04ut8SMs

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.