சிறகடிக்க ஆசை
பரபரப்பின் உச்சமாக அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலாக பார்க்கும் அளவிற்கு சிறகடிக்க ஆசை சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.
முத்துவின் கார் இப்போது காவல் நிலையத்தில் உள்ளது, இதற்குள் நடுவில் இன்றைய எபிசோடில், முத்து மற்றும் அவரது நண்பர்கள் டிராபிக் போலீஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
குடித்துவிட்டு அவர்கள் போலீஸ் அதிகாரி வீட்டில் ரகளை செய்ய அதனை அவர் வீடியோ எடுத்துவிடுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ், ரோஹினி ஷோரூமிற்கு வந்ததை விஜயாவிடம் கூற அவர்களுக்குள் வாக்குவாதம் நடக்கிறது.

நாளைய எபிசோட்
இப்படி முத்து ரகளையோடு இன்றைய எபிசோட் முடிய நாளைய எபிசோடின் புரொமோ வருகிறது.
அதில், முத்து வேலை இல்லாததால் வீட்டை பெறுக்குகிறார், அதனை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார், நமது அறை கூட குப்பையாக உள்ளது என கூற மீனா கோபப்படுகிறார்.
முத்துவிடம் இருந்து துடைப்பத்தை கோபமாக வாங்கி விசீறி அடிக்க விஜயா திகிலடைகிறார்.
இதோ அந்த புரொமோ,
View this post on Instagram

