முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆசிரியரை பாதுகாக்கும் NPP: சரோஜா போல்ராஜ் பதவி விலக அதிகரிக்கும் அழுத்தம்

சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து வலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

சரோஜா போல்ராஜ் சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். எனவே அவர் இந்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு பொருத்தமற்றவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்  

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது பேசுபொருளாகியுள்ள கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் பெண்ணாக, தாயாக, ஆசிரியராக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரோஜா போல்ராஜ் பொறுப்பின்றி செயற்படுகின்றார்.

ஆசிரியரை பாதுகாக்கும் NPP: சரோஜா போல்ராஜ் பதவி விலக அதிகரிக்கும் அழுத்தம் | Kotahena School Student Death Case

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான அவர் அமைச்சர் என்ற பொறுப்பிற்கும், அரசாங்கம் என்ற பொறுப்பிற்கும் அப்பால் செயற்பட்டுக் கொள்கின்றார்.

பாடசாலையில் துன்புறுத்தலுக்கு உள்ளானதோடு மாத்திரமின்றி, மேலதிக வகுப்பொன்றிலும் துன்புறுத்தலுக்கு உள்ளான குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

மூடி மறைக்கப்பட முயலும் அமைச்சர்

அந்த மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பதற்காக இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறுகின்றாரா?

ஆசிரியரை பாதுகாக்கும் NPP: சரோஜா போல்ராஜ் பதவி விலக அதிகரிக்கும் அழுத்தம் | Kotahena School Student Death Case

இது தொடர்பில் கேள்வியெழுப்புவதற்காக நாடாளுமன்றத்தில் நான் முயற்சித்த போது சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினர் எவரும் எனக்கு கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும்.

அவர் இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் இந்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு அவர் பொறுத்தமற்றவர் என்பது தெளிவாகியுள்ளது. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.   

You may like this 

https://www.youtube.com/embed/So12HUWOZic

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.