முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அஞ்சுவது ஏன்..! கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார்

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக்
கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச
சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள் என தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடாவின் பிரம்டன் நிகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம்,
கடந்த 10 ஆம் திகதி அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்து
வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட

அதுமாத்திரமன்றி கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட 104 ஆம் இலக்க தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டத்தின்
பிரகாரம் இம்மாதம் 12 – 18 ஆம் திகதி வரையான ஒரு வார காலம் தமிழினப் படுகொலை
அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அஞ்சுவது ஏன்..! கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார் | Why Sri Lanka Afraid International Investigation

இந்நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்
எரிக் வோல்ஷை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
எவ்வித ஆதாரமும் அற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டு மற்றும் அதனை
அடிப்படையாகக் கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல்
என்பன தொடர்பில் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தினார்.

அதுமாத்திரமன்றி
இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக்
கட்டியெழுப்புவதற்கான அரசின் முயற்சிகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி
சிக்கலாக்குவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

சர்வதேச குற்றவியல் விசாரணை

இது குறித்து ஊடகங்களிடம் நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த்
தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம்,

“தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக்
கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச
சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும், இலங்கை அரசு எவ்வித
குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?”
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அஞ்சுவது ஏன்..! கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார் | Why Sri Lanka Afraid International Investigation

அதுமாத்திரமன்றி ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திட்டு, அதனூடாக சர்வதேச
குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏன் இடமளிக்கவில்லை
என்றும் அவர் வினவியுள்ளார்.

உண்மைக்கு அரசு அஞ்சுகின்றது என்பதே யதார்த்தமாகும். உண்மையின் ஊடாக
மாத்திரமே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

இருப்பினும் முன்னைய
அரசுகளைப் போன்று உங்களது அரசும் அதனைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றது என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. விசனம் வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.