எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின் பேரில் நடைபெற இருக்கும் விசேட கலந்துரையாடலில் கலந்துகொள்ள இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றையதினம்(16.05.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் நாளை நடைபெற உள்ளது.

சஜித் தலைமையில் கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

