யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளருக்கு பதவி உயர்வுடன் கூடிய
இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் பதவி உயர்வு பெற்று அநுராதபுர மாவட்ட செயலக பிரதம கணக்காளராக நியமனம்
பெற்று செல்வதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து
சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இடமாற்றம்
கடந்த 5 வருடங்களாக திரு.சிவரஞ்சன் சிறப்பாக கடமையாற்றி இந்த பதவி உயர்வை
பெற்று செல்கின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குறித்த பதவிக்கு வேறொருவர்
நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.






