விஜய் ஆண்டனி
முதலில் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் நடிகராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இன்று கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி.
இதைத்தொடர்ந்து பிச்சைக்காரன்-2 படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறினார். சின்னத்திரையில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். முதல் திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, பல படங்களில் நடித்து வருகிறார்.


நடிகை வரலட்சுமியா இது.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் வீடியோ
மாஸ் அப்டேட்
இந்நிலையில், இவரின் 26-ஆவது படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 19ம் தேதி மாலை வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Justice has a name ⚖️#VA26 First look | 19th | 5PM@Dir_Joshua @vijayantonyfilm pic.twitter.com/U0gasdiYwA
— vijayantony (@vijayantony) May 17, 2025

