மன்னர் சார்லஸின்(king charles) செல்வம் வேகமாக உயர்ந்து வருவதாக
இங்கிலாந்தில் உள்ள ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளான தி சண்டே டைம்ஸ், புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் பணக்காரர்களின் வருடாந்திர பட்டியலின்படி, பல பில்லியனர்களின் செல்வம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் மன்னர் சார்லஸின் செல்வம் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் செல்வத்தைப் போலவே வேகமாக அதிகரித்துள்ளது.
20 இடங்கள் முன்னேறிய மன்னர் சார்லஸ்
சண்டே டைம்ஸ் பத்திரிகையின்படி, கடந்த ஆண்டில் மன்னர் சார்லஸின் செல்வம் வேகமாக அதிகரித்துள்ளது, £30 மில்லியனில் இருந்து £640 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இங்கிலாந்தின் பணக்காரர்களின் வருடாந்திர பட்டியலில் மன்னர் சார்லஸ் 20 இடங்கள் முன்னேறி 258வது இடத்தைப் பிடித்துள்ளார், மேலும் இரண்டு ஆங்கில பில்லியனர்களான ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்சதா மூர்த்தி ஆகியோரும் அதே இடத்தைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறைந்து வரும் இங்கிலாந்து பணக்காரர்கள்
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட இங்கிலாந்தின் பணக்காரர்களின் வருடாந்திர பட்டியலில் 350 பேர் இடம்பெற்றுள்ளனர், அவர்களில் பில்லியனர்களின் எண்ணிக்கை 165 லிருந்து 156 ஆகக் குறைந்துள்ளது.

பிரிட்டிஷ் ஊடகங்களின்படி, 37 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பணக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது இதுவே முதல் முறை. மில்லியன் கணக்கான பிரிட்டிஷ் மக்களிடம் தற்போது சேமிப்பு எதுவும் இல்லை என்பதை சண்டே டைம்ஸ் செய்தித்தாள் வெளிப்படுத்தியுள்ளது.

