சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்று (18.05.2025) காலை சுவிட்சர்லாந்துக்கு (Switzerland) பயணித்துள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு
குறித்த மாநாடு நாளை (19.05.2025) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் – ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களும், குறித்த நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5,000க்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

