முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப் புலிகளை அழித்த முப்படை தளபதி நான் : எக்காளமிடும் மகிந்த

கனடாவில் (Canada) திறக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

16 வருடங்கள் கடந்த யுத்தம் வெற்றி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எங்கள் தாய் நாடு பிரிவினைவாத ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை உங்களுக்கு தெரியும். இன்று முதல் நாட்டின் ஒவ்வொரு அடிநிலமும் இலங்கையின் இறைமையுள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களின் அடிப்படையிலேயே ஆளப்படும்.”

தமிழ் இனப்படுகொலை

நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து 2009 மே 19ம் திகதி நான் வெளியிட்ட இந்த பிரகடனத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. 

விடுதலைப் புலிகளை அழித்த முப்படை தளபதி நான் : எக்காளமிடும் மகிந்த | Mullivaikkal Remembrance Report Mahinda Rajapaksa

சிங்க கொடியின் கீழ் ஒன்றுபட்ட மற்றும் பெருமைமிக்க தேசத்தின் ஜனாதிபதியாகவும், முப்படை தளபதியாகவும் நான் இந்த பிரகடனத்தை வெளியிட்டேன்.

ஒவ்வொரு குடிமகனும், இந்த நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும், சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், சம உரிமைகளுடனும் வாழக்கூடிய ஒரு தேசம் என்பது நம் அனைவராலும் நீண்டகாலமாக காணப்பட்ட ஒரு கனவாகும்.
ஒரு மக்கள் தலைவராக அது எனது தனிப்பட்ட கனவாகவும் காணப்பட்டது என மகிந்த தெரிவித்துள்ளார். 

பிரம்டன் மேயர் 

மேலும் கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், சமீபத்திய திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்ற என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது.

விடுதலைப் புலிகளை அழித்த முப்படை தளபதி நான் : எக்காளமிடும் மகிந்த | Mullivaikkal Remembrance Report Mahinda Rajapaksa

பிரம்டன் மேயர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற ஆதாரமற்ற பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

யுத்தம் நடைபெற்றவேளை முப்படை தளபதியாக விளங்கியவன் என்ற அடிப்படையில் அதனை நான் முற்றாக மறுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

you may like this 

https://www.youtube.com/embed/AQzHt6BhNYY

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.