கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் பிரபா கணேசன் (Praba Ganesan) தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் செயற்குழு கூட்டம் பம்பலப்பிட்டி (Bambalapitiya) தலைமை காரியாலயத்தில் இன்று (22) நடைபெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுர அரசுக்கு ஆதரவு
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தேசிய கூட்டணியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன் போது கொழும்பு மாநகர சபையில் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

ஜனநாயக தேசிய கூட்டணிக்கு கொழும்பு மாநகர சபை உட்பட கிடைக்கப்பெற்ற பத்து ஆசனங்கள் மக்களின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும்.
மேலும் அரசாங்கம் மக்கள் விரோத செயல்பாடுகளை முன்னெடுத்ததால் ஆதரவினை மீளப்பெறவும் தயங்க மாட்டோம் என பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

