முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூதூர் பிரதேச சபையின் இலங்கை தமிழரசு கட்சி தவிசாளர் அறிவிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக இம் முறை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சம்பூர் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப் படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வரெத்தினம் பிரகலாதன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வேட்பாளர் கலந்துரையாடல் நேற்று (28) மாலை கட்சியின் மாவட்ட அலுவலுகத்தில் இடம் பெற்றுள்ளது.

வேட்பாளர் கலந்துரையாடல்

இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் இந்த முடிவினை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச சபையின் இலங்கை தமிழரசு கட்சி தவிசாளர் அறிவிப்பு! | Muthur Pradeshiya Sabha Secretary Announcement

குறித்த கலந்துரையாடலின் பின்னர் இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.ச.குகதாசன்,”உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மூதூர் பிரதேச சபையில் வெற்றிபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினை சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் ஒன்று கூடி மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக ஜனநாயக ரீதியாக செல்வரெத்தினம் பிரகலாதன் என்பவரைப் பரிந்துரை செய்யதுள்ளனர்.

மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவின் போது ஐந்து உறுப்பினர்களும் முடிவுக்கு ஆதரவாக செயற்படுவார்கள்.”என கூறியுள்ளார்.

வாக்கெடுப்பு

கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த சபைத் தலைவராக பரிந்துரை செய்யப்பட்ட செல்வரெத்தினம் பிரகலாதன்,”ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு மூலமாக என்னை தலைவராக பரிந்துரை செய்து தெரிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எனது வட்டார மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

மூதூர் பிரதேச சபையின் இலங்கை தமிழரசு கட்சி தவிசாளர் அறிவிப்பு! | Muthur Pradeshiya Sabha Secretary Announcement

அத்துடன் பிரதேச சபையின் தலைவர் தெரிவின் பின்னர் இன,மத பாகுபாடின்றி அபிவிருத்திக்காக சமமான வள பங்கீடு மூலமாக அபிவிருத்தி திட்டங்களை திறம்பட முன்னெடுக்கவும் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் எனது சேவைக் காலத்தின் போது முன்னெடுப்பேன்.”என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.