முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தானந்தவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனாதிபதி தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம் (Carrom) மற்றும் தாம் (Checkers/Daam) விளையாட்டு பலகைகள் இறக்குமதி செய்ததில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

, கொழும்பு மேல்நீதிமன்றம் இன்றைய தினம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், முன்னாள் சதொச தலைவர் நலின் பெர்னாண்டோக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சதொச ஊடாக பெருமளவில் மோசடி

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, 2019ஆம் ஆண்டு நிலையான மூவரடங்கிய விசாரணை நீதிமன்றத்தில் (Permanent High Court Trial-at-Bar) வழக்கை தொடர்ந்தது.

இதில், 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரச நிதியை தவறாக பயன்படுத்தி 53 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நஷ்டத்தை அரசுக்கு ஏற்படுத்தியதாக இருவரும் குற்றம் சுமத்தப்பட்டனர்.

அவர்கள், அரசின் பணத்தை பயன்படுத்தி சதொச ஊடாக பெருமளவில் கரம் மற்றும் தாம் பலகைகள் இறக்குமதி செய்து, அவற்றை விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்தனர் என வழக்கில் கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் அரசியல் நோக்கங்களுக்காக நடைபெற்றது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

நீண்ட நாள் விசாரணைகளின் பின்னர், மேல் நீதிமன்றம் இருவரும் அரச நிதி முறைகேடு மற்றும் அதிகாரப்  துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதைக் கண்டறிந்து, குற்றவாளிகள் என அறிவித்தது இந்த தண்டனையை விதித்துள்ளது.        

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.