நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி
ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு
தெரிவாகிய பிரதேச சபை உறுப்பினர்களுக்கான சத்திய பிரமாணம் இன்று(1) ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை
தமிழரசு கட்சியில் மாவட்டக் காரியமான அறிவகத்தில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இதில் இலங்கை தமிழர்
கட்சி உடைய இளைஞர் அணி மற்றும் மாவட்ட கிளையினர் முன்னாள் பிரதேச சபை
உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள்
செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.















