முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தம் : பதிலை கூறிய ஹமாஸ்

 ஹமாஸ் அமைப்பு அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்தத்திற்கு தமது தரப்பு பதிலை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ல் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் (Israel) புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். 

இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இஸ்ரேல் தாக்குதல்

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்தம் நடைமுறையானது.ஆனால், அதில் ஒப்பந்தப்படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை துவக்கி உள்ளது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தம் : பதிலை கூறிய ஹமாஸ் | Hamas Responds To Ceasefire Usa Proposal

இந்நிலையில், இந்த போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியிருந்தார்.

அந்த போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு பல நிபந்தனைகளை விதித்திருந்தது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பு அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்தத்திற்கு சில நிபந்தனைகளின் அடிப்டையில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் 

அதன்படி ஹமாஸ் அமைப்பு.10 உயிருள்ள பிணைக்கைதிகளையும் 18 உடல்களையும் விடுவிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தம் : பதிலை கூறிய ஹமாஸ் | Hamas Responds To Ceasefire Usa Proposal

இதற்கு ஈடாக, இஸ்ரேல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் எதிர்பார்க்கிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்த பின்னர் ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this

https://www.youtube.com/embed/07EcctHjUfU

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்