தக் லைஃப்
வருகிற ஜூன் 5ம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. நாயகன் படத்திற்கு பின் இயக்குநர் மணி ரத்னம் – கமல் ஹாசன் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதே, இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் இப்படத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார்.


நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல்
இவர்களுடன் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் என திரை நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ப்ரீ புக்கிங்
தக் லைஃப் படத்தின் ப்ரீ புக்கிங் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது. உலகளவில் ப்ரீ புக்கிங்கில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், இதுவரை பர் புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தக் லைஃப் இதுவரை ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பாக பார்க்கப்படுகிறது.

