எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மன்னிப்பை கோரியுள்ளார்.
வடமத்திய மாகாண சபைக்குச் சொந்தமான BMW கார் 5 மில்லியன் ரூபாகளுக்கும்
குறைவாக விற்கப்பட்டதாக முன்னர் கூறியமை தொடர்பிலேயே, அவர் மன்னிப்பை
கோரியுள்ளார்.
செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட தவறான செய்திகளால் தான் தவறாக
வழிநடத்தப்பட்டதாகவும், ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக, பதிவைத் திருத்துவதற்கு
தான் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜெயசேகர கூறியுள்ளார்.
வெளிப்படைத்தன்மை
எனவே, ஊடகங்கள் துல்லியமான தகவல்களுடன் அதைப் புதுப்பிக்குமாறும், அவர்
கேட்டுள்ளார்.

BMW கார் 21.8 மில்லியன் ரூபாகளுக்கு விற்கப்பட்டதாக, வட மத்திய மாகாண
உறுதிப்படுத்திய நிலையிலேயே, அவரின் மன்னிப்பு கோரலும் வந்துள்ளது.
ஒட்டுமொத்த வாகன ஏல செயல்முறையில் 124 மில்லியன் ரூபாய்கள் ஈட்டியதாகவும், அது
வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டதாகவும் மாகாண சபை கூறியுள்ளது.

