நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் ஆளும் கட்சி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு இடையில் பெரும் வாக்குவாதமொன்று இடம்பெற்றது.
அதன்போது, அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் உரித்து ஒன்றில் அநுராதபுரத்தில் 500 லட்சம் பெறுமதியான வீடொன்றை 50 லட்சத்திற்கு எழுதியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றஞ்சாட்டினார்.
அத்தோடு, குறித்த வீட்டிற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க தினமும் முகம் கழுவுவதற்கு மாத்திரம் வந்து செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்தை நாடாளுமன்றில் கூறியதற்காக தன் மீது தாக்குதல் நடத்துக் கூடும் ஆனால் தான் அதற்கு அஞ்ச மாட்டேன் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.
பின்னர், அர்ச்சுனாவின் கருத்தைக் கேட்டு கொதித்தெழுந்த அமைச்சர் வசந்த சமரசிங்க, எதற்காக வைத்தியரானோம் என்று தெரியாத ஒரு மனிதர் வைத்தியர் ஆகியுள்ளார் என தெரிவித்ததோடு, அதனை தாங்கள் நாடாளுமன்றில் நிரூபித்து காட்டியதாக தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/ZqSYQ68F9gM

