வவுனியா (Vavuniya) – ஓமந்தை கிராம அலுவலர் வளாகத்திற்குள் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
கூமாங்குளம் கிராம அலுவலர் நாகராஜா ஶ்ரீதரன் தலைமையில் இன்று (04.06.2025) இடம்பெற்ற இந்நிகழ்வில்
முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் சிலையை
திறந்து வைத்தார்.
அன்னம்மா அறக்கட்டளையின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு அதன் ஸ்தாபகர் அருட்பணி
சிற்றம்பலம் கமலகண்ணனால் குறித்த சிலை நிறுவப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலஷண்குகன்,
தெற்கு பிரதேசசபையின் செயலாளர் சு.தெர்ஜனா,ஓமந்தை மத்தியகல்லூரி அதிபர்
செ.பவேந்திரன், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


https://www.youtube.com/embed/RnLKMN5z68k

