முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புலிகளுக்கு பயிற்சி வழங்கிய இஸ்ரேலுக்கு ஏன் அரசாங்கம் ஆதரவு வழங்குகின்றது

 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய இஸ்ரேலுக்கு, அரசாங்கம் ஏன் ஆதரவு வழங்கி வருகின்றது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இஸ்ரேலின் மொசாட் என்னும் புலனாய்வுப் பிரிவு புலிகளுக்கு பயிற்சி வழங்கியதுடன் ஆயுதங்களை வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளுக்கு பயிற்சி வழங்கிய இஸ்ரேலுக்கு ஏன் அரசாங்கம் ஆதரவு வழங்குகின்றது | Why Police Protection For Israel Religious Place

நாடுகளை பிளவடையச் செய்யும் நாடுகளுக்குள் குழப்பம் விளைவிக்கக்கூடிய இஸ்ரேல் விவகாரத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகத் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் யூதர்கள் இல்லாத நிலையில் இவ்வாறு நாட்டில் இஸ்ரேல் மத கலாச்சாரத்தை வியாபிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்ரேல் மத வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இலங்கையில் நான்கு இஸ்ரேல் மத வழிபாட்டு தலங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் இரண்டு பதிவு செய்யப்பட்டவை எனவும் கொழும்பு பகுதியில் இயங்கி வரும் இரண்டு மத வழிபாட்டு தலங்களுக்கு எவ்வித பதிவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் ஹரிணி அமரசூரியிடம் தான் கேள்வி எழுப்பியதாகவும் அதன் போது குறித்த இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் பதிவு கிடையாது என்பதை அவர் உறுதி செய்து இருந்தார் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் காவல்துறையினரும் காவல்துறையின் விசேட அதிரப்படையினரும் எதற்காக இந்த வழிபாட்டு தலங்களை பாதுகாக்கின்றனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு 7 மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இயங்கி வரும் இந்த மத வழிபாட்டு தலங்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது என்பது குறித்து தெரிந்து கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.