இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு முக்கிய செய்தி வெளியாகும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் (Sundaralingam Pradeep) தெரிவித்துள்ளார் .
லங்காசிறி (LankaSri) ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கைதுகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மலையக மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
மலைய மக்களுக்கு காணி உரிமையை உறுதி செய்யும் வகையில் 10 பேர்ச் அளவுள்ள நிலத்தை வழங்குவது சம்பந்தமான முன்மொழிவு காணப்படுகின்றது.
ஆனால் மக்கள் தற்போது 10 பேர்ச்சுக்கும் அதிகமான காணிகள் தேவையாக உள்ளது என்ற கருத்தினை முன்வைக்கின்றார்கள்.
குறிப்பாக, தங்களது பண்ணைகளையும் வீட்டுக்கு அருகில் முன்னெடுப்பதற்கு விரும்புகின்ற தரப்பினர் அதிகளவான நிலத்தினை எதிர்பார்க்கின்றார்கள்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள கானொளியில் காண்க.
https://www.youtube.com/embed/cbjxJZdWHyk

