கனடா (Canada) முழுவதும் பரவலாக நிலவும் காட்டுத்தீயால் வெளியேறும் புகை காரணமாக, டொரண்டோ மற்றும் தென் ஒன்ராறியோ (Ontario) மாகாணம் முழுவதும் காற்று மாசுபாடு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புகை, இன்று மாலை முதல் நாளை காலை வரை நகரம் முழுவதும் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் தரம்
புகை காரணமாக காற்றின் தரம் மோசமாகிறது, பாதைகளை தெளிவாக பார்வையிட முடியாது,என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகை அதிகமாகப் பரப்பப்படும் நேரங்களில், பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விளையாட்டு, முகாம்கள், வெளியிட நிகழ்வுகள் போன்றவற்றை குறைக்கவோ மாற்றியமைக்கவோ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம்
கண்ணீர், தொண்டை சிரமம், தலைவலி மற்றும் இலகுரக இருமல் போன்ற அறிகுறிகள் சிலருக்கு ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.

இந்த புகை கனடாவின் சில பகுதிகளைத் தாண்டி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கும் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ புகை என்பது வாயுக்களும், நுண்மூலிகைகளும், நீராவியும் கலந்து கிடைக்கும் ஒரு கலவையாகும்.
இதில் உள்ள நுண்மையான தூசியூட்டிகள் (fine particulate matter) தான் மக்களுக்கு பெரிய சுகாதார ஆபத்தாக காணப்படுகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

