முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹவுஸ்ஃபுல் 5: திரை விமர்சனம்

அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், சஞ்சய் தத் நடிப்பில் காமெடி த்ரில்லராக வெளியாகியுள்ள ‘ஹவுஸ்ஃபுல் 5’ இந்தி படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

ஹவுஸ்ஃபுல் 5: திரை விமர்சனம் | Housefull 5 Movie Review

கதைக்களம்

பிரிட்டனின் 7வது பணக்காரர் ரஞ்ஜீத்தின் 100வது பிறந்தநாள் விழாவை, அவரது மகன் தேவ் பிரம்மாண்ட கப்பலில் கொண்டாட ஏற்பாடு செய்கிறார்.

ஆனால், பிறந்தநாளுக்கு முன்பே அவர் இறந்துவிடுகிறார்.

ஆனால், தனது முதல் மனைவிக்கு பிறந்த ஜாலி என்ற மகன் இருப்பதையும், முதல் வாரிசு அவர்தான் என்பதையும் ஹாலோகிராமில் அவர் பேசியது மூலம் தேவ் உட்பட ஒரு சிலர் அறிகின்றனர்.

அப்போது ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், அக்ஷய் குமார் ஆகிய மூவரும் நான்தான் உண்மையான வாரிசு என்று தேவிடம் கூறுகின்றனர்.

ஹவுஸ்ஃபுல் 5: திரை விமர்சனம் | Housefull 5 Movie Review

வேறு வழியின்றி மூவரில் யார் என்பதை கண்டுபிடிக்க, அவர்களை கப்பலிலேயே இருக்க தேவ் அனுமதிக்கிறார்.

அத்துடன் யார் வாரிசு என்பதை அறிய டாக்டரை அழைத்து டிஎன்ஏ சோதனை செய்ய சொல்கிறார்.

மறுநாள் ரிசல்ட் வர உள்ள நிலையில், டாக்டரை முகமூடி அணிந்த நபர் கொலை செய்கிறார்.

அதன் பின்னர் கொலையாளி யார்? உண்மையான வாரிசு யார்? தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
 
ஹவுஸ்ஃபுல் 5: திரை விமர்சனம் | Housefull 5 Movie Review

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

படம் பற்றிய அலசல்

ஹவுஸ்ஃபுல் ஃபிரான்சைஸில் வெளியாகியுள்ள 5வது படம் இது. தோஸ்தானா, டிரைவ் படங்களை இயக்கிய தருண் மன்சுக்கானி இதனை இயக்கியுள்ளார்.

அடல்ட் காமெடி படம் என்றாலும் ரொம்பவே ஓவராக கிளாமர், ஏ ஜோக்ஸை வைத்துள்ளனர்.

சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்தாலும், ஏற்கனவே பார்த்து பழகிய காட்சிகள்தான் பெரும்பாலும் நிறைந்திருக்கின்றன.

எனினும், கிளியை வைத்து வரும் ஒரு சீன செம அலப்பறை. அக்ஷய் குமாரின் முந்தைய ஹவுஸ்ஃபுல் படத்தின் ரெபரென்ஸை வைத்து அதனை கனெக்ட் செய்த விதம் அருமை.

ஹவுஸ்ஃபுல் 5: திரை விமர்சனம் | Housefull 5 Movie Review

நர்கிஸ் ஃபாக்ரி, ஜேக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பஜ்வா ஆகிய மூன்று ஹீரோயின்களை காட்டிலும் சித்ரங்டா சிங் கவர்ச்சியில் தாராளம் காட்டி ஸ்கோர் செய்துவிட்டு செல்கிறார்.

படம் முழுக்க காமெடியில் சிரிக்க வைக்க பெரிதும் முயற்சித்திருக்கிறார்கள்.

ஆனால் பல இடங்களில் ஒர்க்அவுட் ஆகவில்லை.

சர்தார் படத்தில் டெரர் வில்லனாக பார்த்த சன்ங்கி பாண்டேவை ‘என்னயா இப்படி காமெடி பண்ணி வெச்சிருக்கீங்க’ என்று கேட்கும் அளவிற்கு செய்திருக்கிறார்கள்.

சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப்தான் அக்ஷய் குமாரை விட ஹீரோ செய்யும் ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்ட விஷயங்களை செய்கிறார்கள்.

ஹவுஸ்ஃபுல் 5: திரை விமர்சனம் | Housefull 5 Movie Review

யார்தான் அந்த வில்லன் என்பது வெளிப்படும் இடம் செம ட்விஸ்ட். யோ யோ ஹனி சிங்கின் ‘லால் பாரி’ பாடல் கேட்கும் ரகம்.

முதல் பாதியைப் போல் இரண்டாம் பாதியிலும் இன்னும் சுவாரசியத்தை கூட்டியிருக்கலாம்.  

க்ளாப்ஸ்

அடல்ட் காமெடி

விஷுவல்ஸ்

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி

சுவாரஸ்யம் குறைவு

பார்த்து பழகிய காட்சிகள்

மொத்தத்தில் ஹவுஸ்ஃபுல் படவரிசை ரசிகர்களுக்கு மற்றுமொரு படம் என்றாலும், அடல்ட் காமெடி பட ரசிகர்களுக்கு இந்த ஹவுஸ்ஃபுல் 5 டீசண்ட் வாட்ச்தான். 

ஹவுஸ்ஃபுல் 5: திரை விமர்சனம் | Housefull 5 Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.